Sunday, August 5, 2018

channel video

என்னுடைய பேச்சாற்றலை வெளிப்படுத்திய முதல் களம்

அம்மா ஒரு கொலை செய்தாள்.............

இருள் சூழ்ந்த இருட்டறையாம்
     கார்மேகக் கருவறையிலே
          கண் திறக்கும் முன் இருந்த
               கனவுகள் பல.....
கருவறையை விட்டு வெளியேறி
     கண் திறந்த பின்
         கள்ளிப்பால் கொடுக்க
               நினைத்தவர் சில.....
அழகின் வார்ப்படமே நீ கூட
     என்னைக் கொல்ல
          நினைத்தாயா......?
     கொன்று விட்டாய் என்
          கனவுகளை.....

அழ மறந்த கதை......

உலகம் விரித்து வைத்த
     கண்ணாடித் திரையில்
          முகம் மறைத்து
               கள்ளச் சிரிப்பு
                    சிரித்து சிரித்து
அழ மறந்து விட்டது.......

குரும்புகள் செய்யும் குட்டிக் குழந்தை
     அன்னை அடிப்பாலோ என்றெண்ணி
          கள்ளச் சிரிப்பு சிரிக்கிறது.......

கள்ளக் காதலால் கற்பைத்
     தொலைத்தவள் 
     கணவனிடம் கள்ளச் சிரிப்பு
     சிரிக்கிறாள்.....

கள்ளச் சிரிப்பு சிரித்து சிரித்து
கண்ணீர் கூட வெளிவர
     வழியைத் தேடுகிறது.....

அழ மறந்து சோகம் முற்றி
     இறப்பு என்னும் இறுதியில்
          இடுகாட்டை நோக்கி
               ஓடுகிறது மானிடர் கூட்டம்......     

தனிமையில் ஒரு ஏக்கம்......

வாழ்வு வெறுமையாயிற்று !
     தனிமை நிலையாயிற்று !
கண்ணாடிப் பூவின் மணம்
     மனதிற்கு சுகமாயிற்று!
கண்ணாடியைப் பார்க்கும் பொழுது
     எனது பிம்பம் கவலையின்
          ஸ்வரூபமாயிற்று........!
     

பேதைக் குழந்தையின் பிதற்றல்........

முறை தவறிய
          முழுநிலவே !
முறை தவறாமல் நீ
          இருந்திருந்தால்
முழு மூச்சோடு
          நான் இருந்திருப்பேன்........!

அன்புள்ள அம்மாவிற்கு......

கார்மேகக் கருவறையில்
     கவலையுடன் வீற்றிருந்த என்னை
உம்முடைய நினைவுகளாலே
     கதைசொல்லி மகிழ்வூட்டினாய் !
உன் உதிரத்தைப் பாலாக்கி
     எனக்கு உணவளித்தாய் !
இரவில் தூங்காமல் கண்விழித்து
     என்னைக் கண்ணுறங்க வைத்த
          கருணைக் கடலே!
நான் புரிந்து கொண்டேன்
               இனி நான் அமர முடியாத 
                    அரிய சிம்மாசனம்
                          உம்முடைய கருவறை என்று..............

New Release.....